Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க வெற்றிப் பெற்றிருந்தால்,

கிழக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடைபெற்றிருக்காது எனவும் அப்படி நடந்திருந்தால், கிழக்கு மாகாணம், வட மாகாணத்துடன் இணைந்து ஈழ வரைப்படத்தில் இடம்பெறுவதை தவிர்த்திருக்க முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் அந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றிருந்தால், இடைக்கால நிர்வாக சபையை விடுதலைப்புலிகளுக்கு வழங்கி, இரண்டு வருடங்களில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, வடக்கு கிழக்கை ஒரு மாகாணமாக மாற்ற விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால் தென் சூடானுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும். அதன் பின்னர் அந்த மாகாண அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் இடமாக மாறியிருக்கும் எனவும் புலிகளால் கூட அதனை தடுத்து நிறுத்தி இருக்க முடியாது போயிருக்கும் எனவும் வீரவங்க கூறியுள்ளார். அம்பாறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழம் குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அடிக்கடி பேசி வருகிறார். தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் அதுபற்றி பேசுகிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களை போல் உலகத்தில், கஷ்டங்களை அனுபவிக்கும் மக்கள் உலகில் எங்குமில்லை. தமிழகத்தை விட இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சிறப்பாக வாழ்கின்றனர். இதனால் இலங்கையில் தமிழ் ஈழம் குறித்து பேசும் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் கஷ்டப்படும் மக்கள் குறித்து கவனம் செலுத்தினால் நல்லது. இதனை விடுத்து, அவர்கள் பழைய பைஸ்போக்பை காட்டி தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனால் இலங்கையை ஏகாதிபத்திய வாதிகளின் இருப்பிட மாக்குவதற்காக கருணாநிதி போன்றவர்கள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் வீரவங்ச கூறியுள்ளார்.

குளோபல் தமிழ் நியூஸ்

0 Responses to கருணாநிதியும், ஜெயலலிதாவும் தமிழகத்தில் கஷ்டப்படும் மக்கள் குறித்து கவனம் செலுத்தினால் நல்லது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com