யேமன் நாட்டின் அபியான் மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜார் நகரில் மரணச்சடங்குகளை நடத்த உதவும் சேவை நிலையம் ஒன்றில் இத்தாகுதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஐந்து அல் கைதா சந்தேக நபர்கள் அமெரிக்காவின் ஆளில்லா விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு பலிவாங்கும் நடவடிக்கையாக இத்தாக்குதல் அல் கைதாவினரால் மேற்கொள்ளபப்ட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அபியான் மாநிலத்தில் இஸ்லாமிய ஆயுதக்குழுக்கலுக்கு எதிராக அண்மைக்காலமாக யேமன் அரச இராணுவம் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. கடந்த ஜூன் மாதம் இப்பிரதேசத்தை மக்கள் ஆதரவுடன் கைப்பற்றியிருந்தது. எனினும் அல் கைதாவினரின் அன்சார் அல் ஷரியா குழுவினர் இங்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 Responses to யேமனியில் தற்கொலை குண்டு தாக்குதல்: 42 பேர் பலி