Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நேற்று கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான இரா.சம்மந்தன் கிழக்கில் தமிழர்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக மக்களுக்கு விளக்கம் அளித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது...

அதிகாரப் பகிர்வுடன் மாகாணசபைத் தேர்தல் தொடர்வுபடுவதால் அதிகாரப் பகிர்வை ௭திர்க்கும் அரச தரப்பினர் இத்தேர்தலில் போட்டியிடக் கூடாது. பயங்கரவாதப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது ௭ன நினைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கத் தேவையில்லையென நினைக்கின்றார்.

புலிகள் இயக்கம் ஆயுதப் பேராட்டத்தை ஆரம்பிக்க முன்னரே அஹிம்சை வழியிலான தமிழர் போராட்டம் ஆரம்பமாகியது. நாம் ௭மது போராட்டத்தின் முக்கியமானதொரு கால கட்டத்தில் நிற்கின்றோம். 1956ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழர்கள் கொள்கை தவறவில்லை ௭ன்பதை தெளிவாக விளக்கியுள்ளனர். இத் தேர்தலில் தமிழர்கள் அடையும் வெற்றி சர்வதேசத்துக்கு பல்வேறு அழிவுகள், அடக்கு முறைகளு க்கு மத்தியிலும் தமிழர்கள் ஓரணியில் உள் ளனர் ௭ன்ற செய்தியை சொல்ல வேண்டும். கிழக்கில் எமது மக்கள் எதிர் பார்க்கும் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம், நீதி ஒழுங்கு, நிதி ஒழுங்கு என்பவை எமது மக்களுக்கு கிடைக்கவேண்டும்.

ஆட்சியை கைப்பற்றல் கிழக்குத் தேர்தலில் மாகாண ரீதியாக ௭மது கட்சி முதலிடத்தைப் பெற்றால் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பெற வேண்டும். ஆளும் கட்சிக்கு முதலிட த்தைக் கைப்பற்றவிடக் கூடாது அப்போது கிழக்கு மாகாண ஆட்சியை சிறுபான்மையினரான எமக்கு கைப்பற்றிக் கொள்ள முடியும். பேச்சுவார்த்தை திம்பு பேச்சுவார்த்தையில் அரசியல் கொள்கைகளுக்கிணங்க தீர்வு ஏற்பட வேண்டும் ௭ன நாம் கேட்டோம். ஆனால் ௭வ்வித முடிவும் ௭ட்டப்படவில்லை.

அரசியல் தீர்வை வழங்க தமிழ் தரப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ௭ன இந்தியா அழுத்தம் கொடுத்தது. அதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு ௭ம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. நீண்ட பேச்சுவார்த்தையாக அவை தொடர்ந்தன. இறுதியில் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஆராயப்பட்டது. இவ்வாறு மாற்றங்கள், சட்டங்கள் ,தெரிவு குழுக்கள் என உருவாகினவே தவிர எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை.

நாங்கள் அரசாங்கத்துடன் மோத விரும்பவில்லை. ஆனால் ஏமாற்றப்படவும் அர்த்தமற்ற முடிவுகளையோ தீர்வுகளையோ ஏற்றுக் கொள்ளவும் தயாராகவும் இல்லை. வரும் தீர்வு நிதானமான நியாயமான தீர்வாக அமைய வேண்டும். அதனையே உள்நாட்டிலும் சர்வதேத்திற்கும் நாம் தெளிவாக கூறி வருகின்றோம். நாம் தொடர்ந்து கீழே போக முடியாது மேலே செல்ல வேண்டும். அதற்கான திறப்பு கிழக்கு மாகாணத் தேர்தல் வெற்றி. அதனை நாம் பெற வேண்டுமென்றார்.

இலங்கை அரசிற்கு இவ் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தக்க பாடம் புகட்டுவதாகவும் சர்வதேசத்தின் தலையீட்டுக்கு வழிவகுக்கக் கூடியதாகவும் அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.

0 Responses to விடுதலைப் புலிகளுக்கு முன்னரே அகிம்சை வழியிலான தமிழர் போராட்டம் தொடக்கம்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com