மட்டக்களப்பு காயன்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவா மற்றும் லெப்.கேணல் யோகா ஆகியோரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியூடாக உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தவேளை வெல்லாவெளி சந்தியில் வைத்து சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடாத்திய கிளைமோர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில்,
1. மட்டு - அம்பாறை அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர்
லெப்.கேணல் தயாசீலன் (பாவா) (செல்வராசா ஜெகதீஸ்வரன் - திருக்கோவில், அம்பாறை)
2. தொண்டு நிறுவனங்களிற்கான மட்டு - அம்பாறை மாவட்ட இணைப்பாளர்
லெப்.கேணல் யோகா (நாகலிங்கம் ஜீவராசா - வெல்லாவெளி, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இம்மாவீரர்களினதும் இதே நாள் முல்லை மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியில் நீரில் மூழ்கி சாவடைந்த
துணைப்படை வீரர்
லெப்டினன்ட் திரிஸ்ராசா (திலிப்பையா திரிஸ்ராசா - கள்ளப்பாடு, முல்லைத்தீவு) என்ற மாவீரரினதும் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
லெப்.கேணல் பாவா, லெப்.கேணல் யோகா ஆகியோரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று
பதிந்தவர்:
ஈழப்பிரியா
20 August 2012
0 Responses to லெப்.கேணல் பாவா, லெப்.கேணல் யோகா ஆகியோரின் 8ம் ஆண்டு நினைவு நாள் இன்று