வவுனியா புளியங்குளம் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
உலங்குவானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் 20.08.1997 அன்று புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர்.
இதன்போது சிறிலங்கா படையினரின் இரு முதன்மை போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டதுடன் மேலும் இரு டாங்கிகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன. 73 மி.மீட்டர் பீரங்கி பொருத்தப்பட்ட கவச ஊர்தி ஒன்று உட்பட பெருமளவான ஆயுதங்கள் மற்றும் படைய கருவிகள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
சிறிலங்கா படையினரின் வல்வளைப்பு முயற்சிக்கு எதிராக தீரமுடன் களமாடி 52 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இம் மாவீரர்களினதும், இதே நாளில்
ஜெயசிக்குறு படையினருடன் மதியாமடுப் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிய,
கப்டன் சங்கரதாஸ் (தெய்வநாயகம் பிரபாகரன் - மட்டக்களப்பு)
ஜெசிக்குறு படையினரின் எறிகணைத் தாக்குதலில் மாங்குளத்தில் வீரச்சாவைத் தழுவிய,
2ம் லெப்டினன்ட் ராஜன் (சுப்பிரமணியம் சந்திரன் - கண்டி)
திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவைத் தழுவிய,
கப்டன் வசந்தன் (றம்போ) (நடராஜா மனோராஜன் - யாழ்ப்பாணம்) ஆகியோரினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
புளியங்குளச் சமரில் காவியமான மாவீரர்களின் விபரம் வருமாறு
1. மேஜர் காவிரிநாடன் (றொசான்) (இராஜகுலேந்திரன் வாசகன் - யாழ்ப்பாணம்)
2. மேஜர் சௌதினி (துரைராஜா றோகினி - யாழ்ப்பாணம்)
3. கப்டன் சந்திரமதி (ரட்ணசாமி ஜெயலட்சுமி - வவுனியா)
4. கப்டன் தயாவதி (கணேசமூர்த்தி லலிதாதேவி - யாழ்ப்பாணம்)
5. கப்டன் வைதேகி (பொன்னழகன் இராசலட்சுமி - கிளிநொச்சி)
6. கப்டன் வேந்தினி (பூபதிராஜா கஸ்தூரி - முல்லைத்தீவு)
7. கப்டன் செந்தணல் (விநாசித்தம்பி அன்பரசி - யாழ்ப்பாணம்)
8. கப்டன் கௌரவன் (இராயகோபால் இராஜசேகர் - வவுனியா)
9. கப்டன் சந்தியா (கனகரட்ணம் செல்வகுமாரி - வவுனியா)
10. கப்டன் பாமகள் (கிருஸ்ணா ஜெனார்த்தனி - கிளிநொச்சி)
11. லெப்டினன்ட் சுபாங்கனி (மகேந்திரராசா கிருபாலினி - முல்லைத்தீவு)
12. லெப்டினன்ட் தாரணி (சுஜித்தா) (கண்ணையா விஜயகுமாரி - அவிசாவளை)
13. லெப்டினன்ட் அமுதநிலா (அமவாசி வக்சலாதேவி - கண்டி)
14. லெப்டினன்ட் அருச்சுனன் (துரைசிங்கம் ஜசிந்தராஜ் - யாழ்ப்பாணம்)
15. லெப்டினன்ட் வண்ணமலர் (வேலாயுதம் டெய்சினி - வவுனியா)
16. லெப்டினன்ட் ஈழநாயகி (யேசுதாசன் சசிகலா - வவுனியா)
17. லெப்டினன்ட் இளந்திரையன் (கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணதாசன் - கிளிநொச்சி)
18. லெப்டினன்ட் சந்திரவதனா (வல்லிபுரம் சந்திரகலா - யாழ்ப்பாணம்)
19. 2ம் லெப்டினன்ட் வேட்பாளன் (கணேசன் நடேசன் - மட்டக்களப்பு)
20. 2ம் லெப்டினன்ட் சூரியலதா (செல்லத்துரை அருட்செல்வி - யாழ்ப்பாணம்)
21. 2ம் லெப்டினன்ட் முல்லை (பிரியா) (சுப்பிரமணியம் புவனேஸ்வரி - யாழ்ப்பாணம்)
22. 2ம் லெப்டினன்ட் மன்னவன் (கிருஸ்ணபிள்ளை சாமுவேல் - அம்பாறை)
23. 2ம் லெப்டினன்ட் பிருந்தா (வல்லிபுரம் சாரதா - யாழ்ப்பாணம்)
24. 2ம் லெப்டினன்ட் பாமினி (பாணுகா) (வேலுப்பிள்ளை கமலாதேவி - யாழ்ப்பாணம்)
25. 2ம் லெப்டினன்ட் வசந்தி (பஞ்சலிங்கம் குகந்தினி - யாழ்ப்பாணம்)
26. 2ம் லெப்டினன்ட் சின்னமணி (கந்தையா இராசலிங்கம் - வவுனியா)
27. 2ம் லெப்டினன்ட் எழிற்கொடி (சுப்பிரமணியம் அமிர்தரஞ்சினி - வவுனியா)
28. 2ம் லெப்டினன்ட் ஜோதி (அருமைத்துரை தர்மினி - யாழ்ப்பாணம்)
29. 2ம் லெப்டினன்ட் ஆடலரசன் (ஆறுமுகம் சுதர்சன் - யாழ்ப்பாணம்)
30. 2ம் லெப்டினன்ட் குலேந்திரன் (செல்வநாயகம் விஜயராசா - யாழ்ப்பாணம்)
31. 2ம் லெப்டினன்ட் கடலரசன் (கதிரவேலு சிவகுமார் - யாழ்ப்பாணம்)
32. 2ம் லெப்டினன்ட் அமுதவீரன் (மலர்விழியன்) (பத்மநாதன் சுயதீபன் - யாழ்ப்பாணம்)
33. வீரவேங்கை இராஜேஸ்வரன் (ராஜா ஜெயச்சந்திரன் - மட்டக்களப்பு)
34. வீரவேங்கை உமையாள் (குணமணி சுகந்தா - யாழ்ப்பாணம்)
35. வீரவேங்கை சிந்துஜா (கந்தசாமி ராஜி - யாழ்ப்பாணம்)
36. வீரவேங்கை நளினி (சரவணமுத்து செல்வமலர் - யாழ்ப்பாணம்)
37. வீரவேங்கை தமிழ்ச்செல்வி (அன்புமங்கை) (முனியாண்டி தமயந்தி - கண்டி)
38. வீரவேங்கை செந்தூரா (தங்கராசா சரஸ்வதி - திருகோணமலை)
39. வீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா) (வேலுப்பிள்ளை உமாரூபி - வவுனியா)
40. வீரவேங்கை அருணந்தி (கணேஸ் யோகமலர் - முல்லைத்தீவு)
41. வீரவேங்கை தமிழ்மொழி (தம்பிராசா சுபாஜினி - யாழ்ப்பாணம்)
42. வீரவேங்கை மாங்கனி (வெள்ளைச்சாமி மாரியம்மா - கொழும்பு)
43. வீரவேங்கை விடிவுமகள் (முருகுப்பிள்ளை பர்மிலா - யாழ்ப்பாணம்)
44. வீரவேங்கை அன்புவிழி (இராமச்சந்திரன் ஜெயதீஸ் - யாழ்ப்பாணம்)
45. வீரவேங்கை பாமதி (இராசலிங்கம நிர்மலாதேவி - மட்டக்களப்பு)
46. வீரவேங்கை சேந்தன் (வேந்தன்) (சந்திரசேகரம்பிள்ளை இராசேந்திரம் - யாழ்ப்பாணம்)
47. வீரவேங்கை ஈகைச்செலவன் (பரமசிவம் உதயசீலன் - கிளிநொச்சி)
48. வீரவேங்கை சிவப்பிரியா (சீவரட்ணம் ஜெயந்தி - யாழ்ப்பாணம்)
49. வீரவேங்கை சுடர்நிலா (தமிழினி) (சக்திவேல் சுவர்ணாதேவி - யாழ்ப்பாணம்)
50. வீரவேங்கை நல்லவள் (சின்னராசா சுகிர்தினி - முல்லைத்தீவு)
51. வீரவேங்கை அல்லி (கிருஸ்ணபிள்ளை சுமித்திரா - யாழ்ப்பாணம்)
52. வீரவேங்கை கயலழகி (உதயகுமாரி) (வடிவேல் தேவி - வவுனியா)
ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
20 August 2012
0 Responses to ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று!