இந்தியாவுக்கு நேற்று யோகேஸ்வர் தத் ஐந்தாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்த நிலையில், மற்றுமொரு பதக்க வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது இந்தியா.
66 கிலோ எடைப்பிரிவுக்கான ஆடவர் மல்யுத்த போட்டியில் சுஷில் குமார், துருக்கியுன் ரமஷான் சாஹினை வெற்றி கொண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். பீஜிங் ஒலிம்பிக்கில் சாம்பியனான ரமசான் ஷாஹினை 3-1 என்ற ரீதியில் சுஷில் குமார் வெற்றிபெற்றுள்ளார். அடுத்து அவர் காலிறுதியில், உஸ்பெகிஸ்தானின், இக்தியோர் நருசோவை சந்திக்கிறார்.
இதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லுவாராயின் நிச்சயம் மற்றுமொரு பதக்கத்தை பெறுவது உறுதியாகிவிடும்.
நேற்றைய லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்ற சில சுவாரஷ்யமான போட்டி முடிவுகளை பார்ப்போம். ஒலிம்பிக்கில் எப்போதும் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தும் ஆடவருக்கான காற்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் பிரேசில் அணியை 1-2 என வீழ்த்தி மெக்ஸிகோ தங்கப்பதக்கத்தை பெற்றது. வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஜப்பானை 2-0 என கொரியா வீழ்த்தியது. முன்னர் பெண்களுக்கான காற்பந்து போட்டியில் இறுதிப்போட்டி வரை நுழைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஜப்பான் அணி. எனினும் அமெரிக்காவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதேவேளை ஆடவருக்கான கூடைப்பந்தாட்டத்தின் இறுதி போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. இறுதி போட்டியில் அமெரிக்கா - ஸ்பெயின் அணிகளும், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆர்ஜெண்டீனா - ரஷ்யா அணிகளும் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட இறுதி போட்டியில் அமெரிக்கா - பிரான்ஸ் அணியை 86-50 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதேவேளை நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஹாக்கி இறுதி போட்டியில் நெதர்லாந்தை 2-1 என வீழ்த்தி ஜேர்மனி வெற்றி பெற்றது. வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பிரித்தானியாவை 3-1 என ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாது மோசமான தோல்வியை தழுவி வெறியேறியது குறிபிடத்தக்கது.
பெண்களுக்கான ஹாக்கி இறுதி போட்டியில் ஆர்ஜெண்டீனாவை 2-0 என நெதர்லாந்து வீழ்த்தியிருந்தது.
இன்றுடன் ஒலிம்பிக் போட்டிகள் யாவும் முடிவடையவுள்ளவுள்ள நிலையில் இரவு உள்ளூர் நோரம் 9.00 மணியளவில் Closing Ceremony நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டி முடிவுகளின் படி அமெரிக்கா 44 தங்கம், 29 வெள்ளி, 29 வெண்கலப்பதக்கங்கள் உட்பட மொத்தம் 102 பதக்கங்கள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் பதக்கங்கள் வென்றுள்ள 78 நாடுகளில் இந்தியாவுக்கு 56 வது இடம் கிடைத்துள்ளது. அதாவதி இந்தியா 1 வெள்ளி 4 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 5 பதக்கங்கள் பெற்று கடந்த முறை ஒலிம்பிக் போட்டிகளிலும் பார்க்க இம்முறை புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.
மற்றுமொரு பதக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா: சுஷில் குமார் வெற்றி பெறுவாரா?
பதிந்தவர்:
தம்பியன்
12 August 2012
0 Responses to மற்றுமொரு பதக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா: சுஷில் குமார் வெற்றி பெறுவாரா?