Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுக் கொள்வது வரவேற்கத்தக்கது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் இதுபற்றி அவர் மேலும் பேசுகையில், "ராகுல்காந்தி மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்பது குறித்து நான் ஏற்கனவே வரவேற்றுப் பேசியிருக்கிறேன். ராகுல் காந்தி போல இளம் தலைமுறை அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான விடயம். இனி ராகுல் காந்தி தான் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் விரிவாக்கம் தற்போது இருக்குமா என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, மாற்றம் இருந்தால் கண்டிப்பாக தெரிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் இருக்கும் ராகுல் காந்தியை, கடந்த வாரம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மக்களவை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தங்கள் கைப்படக் கடிதம் எழுதி சோனியா காந்தியை சந்தித்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ராகுல் காந்திக்கு பிரதமர் பகிரங்க அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com