கடந்த நவம்பர் மாதம், நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்கலம், சரியாக இன்றுகாலை 11 மணிக்கு தடம் பதித்திருக்கிறது.
கடந்த நவம்பரில் நாசா விஞ்ஞானிகள் அனுப்பிய விண்கலம், எட்டு மாதங்களுக்குப் பிறகு செவ்வாயில் தடம் பதித்து, அடுத்த வினாடியிலிருந்து தனது ஆய்வைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா, வலிமண்டலம் செயல்படுகிறதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற ஆராய்ச்சிகளைத் தொடங்க ஆரம்பித்து, அந்த ஆராய்ச்சிகள் அடுத்த நொடியே இங்கு தெரிவது போல விண்கலம் செயல்படும்.
கிட்டத்தட்ட 1400 விஞ்ஞானிகளின் அயராத முயற்சியில் அனுப்பப் பட்டிருக்கும் விண்கலம் பல முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, தகவல்களை இங்கு அனுப்பவும் சரியான முறையில் களம் இறக்கப் பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
0 Responses to நாசா விண்கலம் செவ்வாயில் தடம் பதித்தது