தீ விபத்துக்குள்ளான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்த கிடைத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்தது தெரியவந்துள்ளது.
ஆனால் இதுதான் விபத்து ஏற்பட காரணமா என உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த 30ம் திகத அதிகாலையில் டெல்லியிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடிர்ரென தீ விபத்திற்குள்ளானதில் 34 பயணிகள் பலியாகினர். விபத்திற்கான காரணங்களாக மின்கசிவு, சமூக விரோதிகளின் நாச வேலை என பல விதத்தில் சந்தேகங்கள் எழுந்தன. மேலும் மத்திய ரயில்வே இணையமைச்சர் கே.எச்.முனியப்பா, மின்கசிவால் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், சமூக விரோதிகளின் சதித் திட்டமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது மேற்கண்ட கருத்துகளை எல்லாம் ஆந்திர பிரதேச தடயவியல் அறிவியல் ஆய்வ நிபுணர்கள் மறுத்திருப்பதாக தெரிகிறது. தீ விபத்தில் எரிந்த ரயில் பெட்டியின் மாதிரியை எடுத்து பரிசோதனை நடத்திய பின் வேறு சில தடயங்கள் கிடைத்தமையாலேயே நிபுணர்கள் இவ்வாறு கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தடயவியல் நிபுணர் குழு பரிசோதனை செய்ததில் பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் இருந்ததாக ஆய்வக இயக்குநர் ஓ.நாராயணமூர்த்தி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்த பின்னே விபத்துக்கான காரணம் குறித்து உறுதியாக சொல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். 10 நாட்களுக்குள் தடயவியல் ஆய்வகத்தின் தடயவில் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இறுதி அறிக்கை முறைப்படி சமர்ப்பிக்கப்பட்ட பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Responses to தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு காரணம் பட்டாசு ரசயாணம்?