Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே குழு இன்று திடீரென கலைக்கப்பட்டது. வலுவான லோக்பால் மசோதா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை தயாரித்த மத்திய அரசு, அதனை மக்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவினால் ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாது என்று மீண்டும் போராட்டக் களத்தில் குதித்த ஹசாரே, சமீபத்தில் டெல்லியில் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது, அரசியல் இயக்கத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்தார். அதேசமயம் தான் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கப்போவதில்லை என்றும் கூறி வந்தார்.

இந்நிலையில், அன்னா ஹசாரே குழு இன்று திடீரென கலைக்கப்பட்டது. அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சி யையும் அவர் கைவிட்டார்.

இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்ட அன்னா ஹசாரே, ‘லோக்பால் சட்டத்தை அமல்படுத்த அரசு தயாராக இல்லை. நாங்கள் எத்தனை காலம், எத்தனை முறைதான் உண்ணாவிரதம் இருப்பது?.

உண்ணாவிரதத்தை விட்டு அதற்கு பதிலாக வேறு வழிகளில் போராடுமாறு மக்கள் எங்களிடம் கேட்கின்றனர்.

நானும் இந்த அரசு ஊழலை கட்டுப்படுத்தப் போவ தில்லை என நினைக்கிறேன்.

அன்னா குழு நடவடிக்கைகளை நாங்கள் இன்றுடன் நிறுத்திவிட்டோம். லோக்பால் மசோதா நிறைவேற்றம் பற்றி மத்திய அரசுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். இன்றுமுதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது’ என்று கூறியுள்ளார்.

0 Responses to இன்று முதல் அன்னா குழு என்ற ஒன்று கிடையாது; இனி லோக்பால் பற்றி அரசுடன் பேசமாட்டோம்: அன்னா ஹசாரே அதிரடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com