டெசோ மாநாட்டிற்கான இணையத்தளத்தை திமுக தலைவர் கருணாநிதி தொடக்கி வைத்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்டு 12ம் திகதி, டெசோ மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த இணைய தளத்தில், செல்வா, சபாரத்தினம், அமிர்தலிங்கம் போன்ற இலங்கையின் மூத்த அரசியல்வாதிகளுடன் கருணாநிதி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உட்பட பல தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வெறும் மாநாட்டுடன் முடிந்து போகாமல் மேலும் தொடரும் வகையில் இந்த டெசோ இணையதளம் உருவாக்கப் பட்டிருப்பதாக டெசோ இணையதள ஆசிரியர் ராம்குமார் தெரிவித்தார். ஈழத் தமிழரின் வாழ்வுரிமைக்காக துவக்கப் பட்ட டெசோ, தொடர்ந்து இந்த இணைய தளத்தின் மூலம் இயங்கும் என்றும் டெசோவின் தலைவராக கருணாநிதி இருப்பார் என்றும் டெசோ இணையதள ஆசிரியர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை டெசோ மாநாட்டில் தனி ஈழத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றலாமா என திமுக உட்கட்சி வட்டாரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக பிரமுகர் ஒருவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இமாநாட்டில் தனித்தமிழீழம் தொடர்பான தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படாது என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த அறிவிப்பால் மாநாடு களையிழந்து போய்விடும் நிலைமை தோன்றியதை அடுத்தே, இத்தீர்மானத்தை நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் மறுபடியும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத்தமிழர்களின் நிலை குறித்து டெசோ மாநாட்டில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதால் மாநாட்டில் அனைவரும் பங்கேற்கவேண்டுமென மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
0 Responses to டெசோ மாநாட்டுக்கு இணையத்தளமும் தொடக்கம்