புனே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அம்மாநில அரசின் நிர்வாக குறைபாடே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மாநில உள்துறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.ஆர்.பாட்டீலின் செயல்பாடுகள் தரமானதாக இல்லை, செம்மையானதாக இல்லை. அம்மாநில அரசும் உள்துறையின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதில்லை. எனவேதான், மும்பை, புனே என்று மாறிமாறி குண்டுவெடிப்புகள் நடந்த வண்ணம் உள்ளது. இது தொடர்ந்து கொண்டிருந்தால் மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.
அதோடு, இந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு நிகழ்வு என்பது, சமூக நல்லிணத்துக்கு நல்லதல்ல. மொத்தத்தில், மாநில அரசின் நிர்வாக குறைபாடே புனே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணம். என்று கூறியிருக்கிறார்.
புனே குண்டுவெடிப்புக்கு அம்மாநில அரசின் நிர்வாக குறைபாடே காரணம்:சரத்பவார்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 August 2012
0 Responses to புனே குண்டுவெடிப்புக்கு அம்மாநில அரசின் நிர்வாக குறைபாடே காரணம்:சரத்பவார்