குஜராத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் பா.ஜ கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
குஜராத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் புதிதாக கட்சி தொடங்குவதற்காக பா.ஜ கட்சியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருடன் முன்னாள் மத்திய அமைச்சருமான கன்ஷிராம் ரானாவும் பா.ஜ.விலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது.
கேசுபாய் படேல் கடந்த 90ம் ஆண்டுகளில் குஜராத்தில் பாரத ஜனதா கட்சியை கொண்டுவந்தவர் ஆனால் நரேந்திர மோடியின் வளர்ச்சியால் இவரின் செல்வாக்கு குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் பா.ஜ கட்சியிலிருந்து விலகுவார் என எதிர்பாக்கப்பட்டது போல கட்சியிலிருந்து விலகுவதை நேற்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து கன்ஷிராம் ரானாவும், கேசுபாய் படேலும் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் நிதின்கட்கரிக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த
கேசுபாய் படேல் 60 ஆண்டுகளாக கட்சிக்கு சேவை செய்த நாம் இப்போது வருத்தத்துடன் விலகுகிறோம். பா.ஜ., கட்சி குஜராத்தில் தனிநபர் கட்சியாக மாறிவிட்டது எனவும் பா.ஜ.வின் கொள்கைகள் எல்லாம் போய்விட்டதாக தெரிவித்தார். மேலும் ஏழைகள், நடுத்தர மக்களுக்கு அரசு மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. ஆக உண்மையான பா.ஜ கட்சி ஒன்றினை புதிதாக தொடங்குகிறேன் என்று அவர் கூறினார்.
0 Responses to பா.ஜ கட்சியிலிருந்து கேசுபாய் படேல் விலகல்