ரம்லான் பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு கைகளில் மெகந்தி வகை மருதாணி பூசிக்கொள்ளும் பெண்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படுவதாக பரவிய திடீர் வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகமெங்கும் பரவிய இந்த வதந்தியை அடுத்து பெருநாளன்று மொகந்தி வைத்துக்கொண்ட பல இஸ்லாமிய பெண்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளனர். பிற மாநிலங்களுக்கும் இவ்வதந்தி பரவியுள்ளது.
ஒரு சிலருக்கு வேறு காரணங்களால் ஏற்பட்ட மயக்கம், தலைவலி என்பவற்றுக்கு அவர்கள் மெகந்தி வைத்துக்கொண்டதே காரணம் என முதலில் தகவல் பரவியுள்ளது. இது குறித்து அவர்களது உறவினர்களே தகவல்களை பரப்பியதை அடுத்து வேகமாக வதந்தி அனைத்து இடங்களுக்கும் பரவியுள்ளது.
வானம்பாடியில் மருத்துவமனையில் மக்களை கட்டுப்படுத்த சென்ற காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளதுடன், மருத்துவமனனயும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையின் புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டே உள்ளிட்ட பல இடங்களில் பீதி ஏற்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் முற்றூகை போராட்டமும் நடந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் குவிந்த பலருக்கு தடுப்பு மருந்துகளுக்கு வழங்கப்பட்டதை அடுத்து இவ்விவகாரம் உண்மை தான் என மக்கள் நம்ப தொடங்கியுள்ளனர். இன்று காலை வரை இப்பதற்றம் மக்களிடையே அதிகமாக காணப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தூள்ளது.
மெகந்தி வைத்துக்கொண்டவர்களுக்கு அலர்ஜியா? : பரவிய திடீர் வதந்தியால் பதற்றம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
20 August 2012
0 Responses to மெகந்தி வைத்துக்கொண்டவர்களுக்கு அலர்ஜியா? : பரவிய திடீர் வதந்தியால் பதற்றம்