Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

என்னிடம் இருந்து பிரிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் படத்தைத் தனது கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த உணர்வாளர் க.சி.வாசன்.

சென்னையில் அய்யன் திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை உருவாக்கியவர் க.சி.வாசன்.

ஆட்டோ என்பதன் சரியான தமிழ் பதம் தானி (தானியங்கி-auto).

இவரது தானிக்கு (ஆட்டோ) தனிச் சிறப்பு உண்டு.

தானி எங்கும் தமிழரின் குரலாகத் தமிழ் தேசிய அடையாளங்கள், வாசகங்கள். வெளியில், முத்துக்குமரன். திருவள்ளுவர் படங்கள், உள்ளே பிரபாகரன் படம் என்று இருக்கும்.

பயணிகள் பலரும் உள்ளே ஏறியவுடன் ஒலிக்கும் பாடல் 'வருவாண்டா பிரபாகரன்' என்னும் பாடல் தான்.

தானியில் தமிழ் ஈழ தேசிய, தமிழர் எழுச்சிப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். இதில் பயணம் செய்பவர்களுக்கு, இறங்கும் போது கொஞ்சம் தமிழ் உணர்வையும் ஊட்டி விடுகிறார் வாசன்.

மேலும் இவர் தனது குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர்களை வைத்துள்ளார்.

தமிழ் தேசியம் என்ற கருத்தில் ஆழமாக வேரூன்றிய வாசன், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நமது இனத்தின் தலைவர்.

விடுதலைப் புலிப்படை நமது இனப் பாதுகாவலர்கள். இவர்களைத் தமிழர்களிடம் இருந்து எந்த அரசியல் சக்தியாலும் பிரிக்க முடியாது என்கிறார்.

தமிழர் அடையாளங்களை, தலைவர்களை வெளியே பகிரங்கமாக பயன்படுத்துங்கள்.

அனைவரும் அறியும்படி செய்யுங்கள். யாருக்கும் பயப்பட வேண்டாம், அரசுக்கும் அஞ்ச வேண்டாம்.

நாம் தமிழர் என்பதில் கர்வம் கொள்வோம் என்கிறார் வாசன்.

0 Responses to தலைவர் பிரபாகரன் பெயரை கையில் பச்சை குத்திய சென்னை தமிழர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com