Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க.வின் ஏற்பாட்டில் சென்னையில் நடைபெறவிருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க திமுக கோரியுள்ளது.

திமுகவின் இந்த மனு மீதான விசாரணை இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே உயர்நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு வராத நிலையில் டெசோ மாநாட்டை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தவும் திமுக முடிவு செய்துள்ளது.

இதற்காக மாற்று ஏற்பாடாக கலைஞர் அரங்கமும் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடத்த உத்தேசித்துள்ள டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதனால், டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக வெளியுறவு அமைச்சகம் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த தடை விதித்திருந்தது.

அதேவேளை, “ஈழம்” வார்த்தையை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்புகொண்டு பேசப்படும் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெசோ மாநாட்டில் “ஈழம்” என்ற வார்த்தையை பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to 'ஈழம்' வார்த்தைக்கு மத்திய அரசு திடீர் அனுமதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com