Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈரான் நாட்டின் மீது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் தரைவழியாக தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பது மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. மேலும் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது தொடர்பாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஈரானில் யுரேனிய செறிவூட்டும் ஆலை இருப்பதாகக் கருதப்படும் போர்டோ நகரை இலக்கு வைத்து கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன்னதாக இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தக் கூடும் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அமெரிக்கா ஒத்துழைக்காவிட்டாலும் தனியாக இஸ்ரேலே தாக்குதல் நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்தியாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவருமே இஸ்ரேலின் விருப்பதிற்கு பச்சைக்கொடி காட்டுவதாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அக்டோபர் இறுதி அல்லது நவம்பரின் முற்பகுதியில் இஸ்ரேல் நிச்சயம் தாக்குதலை தொடங்கும் என்று கூறப்படுகிறது. தேர்தல் நேரமென்பதால் இஸ்ரேலின் நடவடிக்கையை எந்த ஒரு அமெரிக்க அதிபர் வேட்பாளரும் தடுக்க முடியாத நிலைதான் ஏற்படும் என்பதால் இஸ்ரேல் தமது முடிவில் திடமாக இருப்பதாகவும் தெரிகிறது.

0 Responses to ஈரான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com