Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விருதுநகரிலும் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருந்தார்கள் மக்கள் நலப் பணியாளர்கள். விருதுநகர் நான்கு வழிச் சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட, 120 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றினார்கள் காவல் துறையினர்.

அப்போது “சீக்கிரம் ஏறு.. சீக்கிறம் ஏறு..” என்று அவசரம் காட்டி, தரக்குறைவாகவும் நடத்தியிருக்கிறார்கள் காக்கிகள். அப்போது ”எங்களை ஏன் இப்படி இளக்காரமாக நடத்துகின்றீர்கள்?” என்று நியாயம் கேட்டிருக்கின்றார் விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளரான சுப்பிரமணியன். இவர், ஊரக வளர்ச்சித் துறையின் மாநிலத் தலைவரும் ஆவார். உடனே ஆத்திரப்பட்டு சுப்பிரமணியனை தாக்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ஐ. தண்டபாணி. எஸ்.எஸ்.ஐ.யோடு சேர்ந்து கொண்டு கான்ஸ்டபிள் சுரேஷ் கனியும் எகிறியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட 120 பேரும் விடுதலையானாலும் கூட, சுப்பிரமணி தாக்கப்பட்டதைக் கண்டித்து மாநில அளவில் ஆர்ப்பாட்டம், விருதுநகரில் கண்டனப் பேரணியெல்லாம் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர் அரசு ஊழியர்களின் பல்வேறு அமைப்பினர்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

0 Responses to மக்கள் நலப் பணியாளர்களை மட்டமாக நடத்திய விருதுநகர் காவல்துறை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com