வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்களின் அனுமதியை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் நிதியுதவிப் பெற்று, அந்த பணத்தை தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக செலவு செய்வதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் உள்ள 4 ஆயிரம் தொண்டு நிறுவனங்களில், தமிழகத்தில் மட்டுமே 794 தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் நிதியுதவி பெறுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடும் உதயகுமார், வெளிநாடுகளில் நிதியுதவிப் பெற்றுவருவதை சுட்டிக் காண்பித்துப் போடப்பட்ட வழக்கின் மூலம், மத்திய நிதித் துறை, உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்ததன் அடிப்படையில், தொண்டு நிறுவனங்க்ள வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முறைகேடாக செலவு செய்தது தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு, தொண்டு நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்து அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்களின் அனுமதி ரத்து: மத்திய அரசு
பதிந்தவர்:
தம்பியன்
10 August 2012
0 Responses to வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் தொண்டு நிறுவனங்களின் அனுமதி ரத்து: மத்திய அரசு