சர்வதேசத்தின் முன் ஐந்து கோரிக்கைகள முன்வைத்து இருபத்தியிரண்டு தினங்களாக உண்ணா நிலைப் போராட்த்தை நடாத்தி வந்த சிவந்தன் கோபி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது போராட்டத்தை நிறைவு செய்தார்.
பன்னாட்டு மக்களினதும் கவனத்தையீர்ந்த அவரது போராட்டத்தின் நிறைவுநாளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர். உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற்று வந்த ஸ்ரற்போர்ட் நெடுஞ்சாலை இலகு தொடருந்து நிலைய அருகாமையில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த முர்த்தி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
தமிழ உணர்வாளரும் நீண்டகாலச் செயற்பாட்டாளருமான திருமதி சிவயோகம்மா ஜெயசிங் அவர்கள் திரு. சிவந்தனுக்கு பழச்சாறு வழங்கி அவரது போராட்த்தை நிறைவுக்கு கொண்டுவந்தனர். அதனைத் தொடரந்து நடைபெற்ற கூட்டத்தில் திரு. ஜெயானந்தமூர்த்தி, திரு. சுப்பிரமணியம் பரமேஸ்வரன், திரு. கந்தையா இராஜமனோகரன், தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரித்தானியக்கிளை பொறுப்பாளர் திரு. தனம், தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. சோபி சிவச்சந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலர் திரு. வை.கோ, தமிழர் பொதுவுடமைக்கட்சியின் தலைவர் திரு. பெ. மணியரசன் ஆகியோரது உரைகள் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.
நிறைவாக திரு. சிவந்தன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையில் கடந்த இருபதியிரண்டு நாட்களும் தன்னோடு இணைந்து செயலாற்றிய இளையவர்களையும் மற்றவர்களையும் தோழமையுடன் நினைவுகூர்ந்தார். நாற்பதாயிரம் மாவீர்களது தியாகத்தினால் ஏற்பட்ட ஆத்மபலமே தன்னால் இப்போரட்டத்தை உறுதியுடன் மேற்கொள்ள உதவியது, இதுபோன்ற போராட்டங்கள் தொடரும் எனத் தெரிவித்தார்.
மாலை 5.45 மணிக்கு நிகழ்ச்சிகள் நிறைவடைந்த்தும், அவ்விடத்திலிருந்து வெளியேறி, ஆரம்பநாள் நிகழ்ச்சியின்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்
பதிந்தவர்:
தம்பியன்
13 August 2012
0 Responses to சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவில் மக்கள்திரள்