Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பதினொராவது தடவையாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விழையாட்டு விழா! சுவிசில் வின்ரத்தூரில் நேற்று முன்நாள் சனிக்கிழமை காலை தமிழீழத் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.

இது புலத்து வாழ் தமிழீழ விளையாட்டு வீரர்களிற்கு ஓர் சிறந்த களமாகும், பல நாடுகளில் இருந்தும் வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து அகவணக்கம், ஓலிம்பிக் தீபம் ஏற்றல் என்பனவற்றுடன் தொடங்கப்பட்ட விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

அனைத்துலக ரீதியில் வீரர்கள் கலந்து கொண்டு மிகவும் உற்சாகமாக விளையாடினார்கள்.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்கள், அனைத்துலக ரீதியிலான விளையாட்டுக்கள் என விறுவிறுப்பாகவே விளையாட்டுக்கள் நடைபெற்றன.

காற்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், கிளித்தட்டு, அஞ்சலோட்டம், குறிபார்த்துச் சுடுதல், முட்டியுடைத்தல், கயிறுழுத்தல், நூறு மீற்றர் ஓட்டம், நீண்டதூர ஓட்டம், சங்கீதக் கதிரையென இன்னும் பலவும் நடைபெற்றன.

முட்டியுடைத்தல், கயிறுழுத்தல் என்பனவற்றை மிகவும் விருப்புடன் சிறுவர்கள் பெரியவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் அதிகமாகக் கூடி ரசித்துக் குதூகலித்ததைக் காணமுடிந்தது.

தமிழீழக் கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டியை மேலும் தரமாக நடத்த வேண்டும் என்பது பற்றிய எண்ணத்துடன் தொடர்ந்தும் சுவிஸ் தமிழர் இல்லத்தால் நடத்தப்படும் விளையாட்டப் போட்டியை தாங்கள் ஆதரிப்பதாக பல கழகங்களைச் சேர்ந்தவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.

அத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தன.

0 Responses to சுவிசில் சிறப்பாக இடம்பெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com