சுவிசின் ஊரி மாநிலத்தில் இருந்து ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் காலநிலை சீர்கேட்டிற்கு மத்தியில் ஆறாவது நாளாகத் தொடர்கின்றது.
பகல் வேளை ஊரி மாநிலத்தின் அல்டோர்ப் நகரில் சுவிஸ் நாட்டவரிடம் விடுதலை நோக்கிய பயணத்தின் நோக்கத்தை வைகுந்தன் விபரித்தார். அதனைத் தொடர்ந்து, மழை பெய்து கொண்டிருந்த போதும் மனம் தளராமல் ஊரியிலிருந்து கிளாறவுஸ் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார்.
பீல் நகரில் செல்வி தமிழினி, வைகுந்தனுடன் இணைந்து மிதிவண்டியில் பயணம் செய்தது போல ஊரி மாநிலத்தில் செல்வி நிதுர்சனா கிளாறவுஸ் நோக்கி வைகுந்தன் புறப்பட்ட போது குறுகிய தூரம் மிதிவண்டியில் பயணித்தார்.
புரூக்லன், ஸபீரிங்கன், கிளவுசன்பாஸ் ஊடாக கிளாறவுஸ் நோக்கிச் சென்ற பயணம் மிகவும் கடினமானதாகும். காற்று, மழை, குளிருக்கு மத்தியில் கடல் மட்டத்திலிருந்து இரண்டாயிரம் மீற்றருக்கும் அதிகமான உயரமுடைய அல்ப்ஸ் மலைத்தொடரைக் கடந்து இரவு பத்து மணியளவில் கிளாறவுசிற்குள் நுளைந்த வைகுந்தனை கிளறவுஸ் வாழ் தமிழர் உணர்வு பூர்வமாக வரவேற்றனர்.
காலநிலையையும் பொருட்படுத்தாமல் மனவுறுதியுடன் விடுதலை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ள வைகுந்தனைப் பலரும் பாராட்டினார்கள்.
காலநிலை சீர்கேட்டிற்கு மத்தியில் ஈழப்பற்றாளனின் விடுதலை நோக்கிய பயணம்
பதிந்தவர்:
தம்பியன்
07 August 2012
0 Responses to காலநிலை சீர்கேட்டிற்கு மத்தியில் ஈழப்பற்றாளனின் விடுதலை நோக்கிய பயணம்