Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தான் - இந்தியா எல்லை பகுதியில் நேற்று இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே மோதல் வெடித்திருப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மாலா பேலா, கார்கல், சித்ரா முகாம், நாகா நம்பர் 10 முகாம், ஜம்மு காஷ்மீரின் ஆக்னூர் செக்டர் என்பவற்றை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவத்தினர் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய தரப்பால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தாம் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பலியாகியதாகவும் மற்றையவர் தப்பித்து சென்றுவிட்டதாகவும் இந்திய எல்லைபப்டையினர் தெரிவித்துள்ளனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி குறித்த பாகிஸ்தான் இராணுவீரர் இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக உள்நுழைய முயற்சித்ததால் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 7.30 மணிவரை துப்பாக்கிச்சூடு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் மாத்திரம் பல தடவடை பாகிஸ்தான் இராணுவத்தினர் சமாதான ஒப்பந்தத்தை மீறி இந்திய இராணுவத்தினர் மீது வலிந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக இந்திய இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

0 Responses to சமாதான ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான்? : இந்திய - பாக் எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com