ஜேர்மனியின் டின்ஸ்லாகன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் சிறுவனான சாருஜன் கஜேந்திரன் இவ்வாண்டும் ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் சாதனைகள் படைத்துள்ளார்.
இவர் 02ம் திகதி யூன் மாதம் மாநில ரீதியான போட்டிக்காக நடைபெற்ற தெரிவாளர் போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் இவரைப்போல் பலநூறு போட்டியாளர்கள் இவரது பத்து வயதுப் பிரிவில் கலந்து கொண்டார்கள்.
இப்போட்டியில் சாருஜன் 50மீ ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பந்துஎறிதல், 800மீ ஓட்டம் ஆகிய 5 விளையாட்டுகளிலும் கலந்து கொண்டார்.
இவர் 50அ நீளத்தை 7.87செக்கன்டில், நீளம் பாய்தலில் 4.30மீ தூரம் பாய்ந்தும், உயரம்1.24மீ பாய்ந்தும், பந்து 40.00மீ தூரம் எறிந்தும், 800மீ தூரத்தை 3.04.04 நிமிடத்தில் ஓடி 4 விளையாட்டுகளில் முதலிடத்தையும் பந்து எறிதலில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இப்போட்டி நடைபெற்ற Bottrop நகர மைதானத்தில் 1.24மீ உயரம் பாய்ந்து தனது கழகத்தின் பழைய சாதனையை முறியடித்து தனது புதிய சாதனையையும் நிலை நாட்டினார் என்பதை இதில் குறிப்பிட வேண்டும்.
இவரது சாதனையை ஜேர்மனியில் வெளிவரும் பத்திரிகைகளான NRZ, Rheinschepost ஆகியவை படங்களுடன் பெரிய தலையங்கங்களாகவே பிரசுரித்தன. ஆனாலும் இவரது குறிக்கோள் நீளம் பாய்தலில் புதியசாதனையை நிலைநாட்டவேண்டும் என்பதே.
அக்குறிக்கோள் இம் மைதானத்தில் தவறிப்போனதால் பெரும் கவலையடைந்தார். இவரது கவலையை அறிந்த பெற்றோரும் பயிற்றுவிப்பாளரும் அவருக்கு ஆறுதல் கூறி அடுத்து 30ம் திகதி யூன் மாதம் நடைபெறவிருக்கும் மாநில ரீதியான மெய்வல்லுநர் பேட்டியில் இச்சாதனையை நிலை நாட்டலாம் என ஊக்குவித்தனர்.
இதனால் இவரும் அதி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு 30ம் திகதி Oberhausen நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்துகொண்டார். அங்கு ஒவ்வொரு விளையாட்டிற்கும் அதிசிறந்த வீரர்களான 12 பேர் ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொள்வார்கள்.
இவர்களில் எமது சாருஜனும் 5 விளையாட்டுகளிலும் பங்குபற்றினார்.
இவர் அன்று நடைபெற்ற 50மீ ஓட்ட நீளத்தை 7.71செக்கனில் ஓடியும், உயரம் பாய்தலில் 1.24மீ பாய்ந்தும், நீளம் பாய்ந்தலில் 4.48மீ தூரம் பாய்ந்து மூன்று விளையாட்டுகளிலும் முதலிடத்தையும் 38.00மீ தூரம் பந்து எறிந்து இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டு நீளம் பாய்தல், 50மீ ஓட்டம், உயரம் பாய்தல் ஆகியவற்றின் இவ்வாண்டு “Kreismeister” என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
அது மாத்திரமன்றி தனது குறிக்கோளான நீளம் பாய்தலின் பழைய கழக சாதனையை முறியடித்து தனது புதிய சாதனையையும் நிலைநாட்டி பெற்றோரையும் பயிற்றுவிப்பாளர்களையும் இன்பத்தில் ஆழ்த்தினார்.
இவரது சாதனைகளை வாழ்த்தி மீணடும் ஜேர்மன் பத்திரிகைகள் செய்திகளை பிரசுரித்தன.
இவர் விளையாட்டில் மாத்திரமன்றி படிப்பிலும் தான் சளைத்தவர் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவ்வாண்டு ஜேர்மனியில் மிகச் சிறந்த Gymnasium பாடசாலைக்கு தனது 5ம் ஆண்டைத் தொடர்வதற்காகத் தெரிவாகியுள்ளார் என்பதையும் சந்தோசத்துடன் இதில் குறிப்பிடுகின்றோம்.
0 Responses to மீண்டும் ஜேர்மனியில் இலங்கைத் தமிழ் சிறுவன் சாருஜனின் சாதனைகள்