கவிஞர் வைரமுத்து எழுதிய 'மூன்றாம் உலகப் போர்’ என்னும் நூல் திறனாய்வு விழா நிகழ்வு கடந்த 4-ம் தேதி தேனியில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் எனது மகனின் வேண்டுகோளுக்கிணங்க நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போகமாட்டேன் என்று தெரிவித்தார்.
'மூன்றாம் உலகப் போர்’ என்னும் நூலைத் திறனாய்வு செய்த வைரமுத்துவின் மகன் கபிலன், இதுவரை எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், நூல்கள் படைத்த என் தந்தைக்கு இந்த விழா மூலம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
அவர் ஈழத் தமிழர்களின் அவலம் குறித்து ஒரு காவியம் எழுத வேண்டும். அதுவே அவர்களின் பிரச்சினைகளை உலகுக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இவ்விழாவில் அடுத்துப் பேசிய கம்பம் செல்வேந்திரன், மூன்றாம் உலகப் போர். இது கவிஞரின் 36-வது நூல். புத்தகமாக வெளிவந்த மூன்று மாத காலத்திற்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது.
எனவே, கபிலன் வைத்த கோரிக்கையை நினைவில் வைத்து, ஈழத் தமிழர் காவியம் படையுங்கள் என்று தன் பங்குக்கும் வேண்டுகோள் வைத்தார்.
இவ்விழாவில் இறுதியாக உரையாற்றிய கவிஞர் வைரமுத்து அவர்கள்,
எல்லோரும் மகனிடம்தான் வேண்டுகோள் வைப்பார்கள். ஆனால், என் மகன் என்னிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறான்.
நிச்சயமாக, ஈழத் தமிழர் அவலம் குறித்து காவியம் எழுதாமல் நான் போக மாட்டேன் என்று முடித்தபோது அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்தது!
ஜூனியர் விகடன்
0 Responses to ஈழத்தமிழர் காவியம்! படைக்கப் போகிறார் கவிஞர் வைரமுத்து!