இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, இடது சாரிக்கட்சித் தலைவர்கள் சந்தித்துள்ளனர். நடைபெறவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு மசோதாவை, தேவையான திருத்தங்களுடன் நிறைவேற்றக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாகத் தெரிகிறது.
அதன்படி, வருமானக் கோட்டுக்கு கீழ், வருமானக் கோட்டுக்கு மேல் என்று எந்த வரையறையும் இல்லாதபடி, அனைவருக்கும் மாதம் 35 கிலோ அரிசி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கிலோ அரிசியின் விலை 2 அல்லது 3 ரூபாய்தான் நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் உணவுப்பாதுகாப்பு மசோதாவில் தேவையான திருத்தங்களை செய்யவும், அதன்பின்னர் நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியேத் தீரவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தவும் பிரதமரை சந்தித்ததாக பிரகாஷ் கரத் தெரிவித்துள்ளார்.
0 Responses to இடது சாரிக்கட்சித் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு