Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் நேற்றைய மூன்றாம் நாள் நிகழ்வுகளின் போது, சுவிற்சர்லாந்தின் உள்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரும், கூட்டாட்சி கவுன்சிலர்களில் ஒருவருமான அலெயின் பெர்செட் கலந்து கொண்டார்.

நேற்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வருடத்திற்கான லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா குறித்து அவர் உரையாற்றினார். இதன் போது, சில வருடங்களுக்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட சுவிற்சர்லாந்து திரைப்பட நிறுவனம் (The Institute of Swiss Film) ஒன்றை உருவாக்கும் திட்டத்தை இப்போது கையில் எடுப்பதாக இல்லை என்றார்.

சுவிற்சர்லாந்து சினிமா மற்றும் ஆடியோ விசுவலுக்கான அம்பிரெல்லா அசோசியேசனின் கோரிக்கைக்கு ஏற்பட்ட கலாச்சார துறை அமைச்சு இது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்தது எனவும் எனினும் இத்திட்டத்தை இப்போது அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார். எனினும் சுவிற்சர்லாந்து கலாச்சார துறை சுவிற்சர்லாந்தின் சினிமா துறையை ஊக்குவிப்பதற்காகவும், பிரபல்யப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து நம்பிக்கைக்குரியதாக செயற்படும் என்பதற்கு உறுதியளித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்தின் கலாச்சார தோற்றம், சினிமா துறை சிறந்த இடத்தை வகிப்பதற்கு அவற்றுடன் இணைந்து பனியாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் கலாச்சாரப்படைப்புக்களுக்கு உகந்தத்தாகவே லொகார்னோ திரைப்பட விழா நடைபெறுகிறது என்பதனை தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும், கலாச்சார கொள்கைகள், பரிந்துரைகளை செய்யக்கூடியவையாக இருக்க கூடாது. எனினும் கலைப்படைப்பின் தரம், சுயமான தன்மை, பரிசு பெறும் தகமை என்பனவற்றை இலக்காக கொண்டவையாக காணபப்ட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்தின் கலாச்சார தோற்றம், சினிமா துறை சிறந்த இடத்தை வகிப்பதற்கு அவற்றுடன் இணைந்து பனியாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக
சுவிற்சர்லாந்து உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் 2013ம் ஆண்டு தொடக்கம் சிறந்த நடனக்கலைஞருக்கான விருது எனவும் புதிய விருதை அறிமுகப்படுத்தப்போவதாகவும், பிரீபூக் மாநிலத்தில் இந்நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்தார். எதிர்கால மற்றுமொரு மாற்றாக சுவிற்சர்லாந்து திரைப்பட விருது, சூரிச் - ஜெனிவா இடையிலான வெளிகளில் வழங்க சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்றார்.

0 Responses to நாட்டின் கலாச்சார படைப்புக்களுக்கு உகந்ததாகவே திரைப்பட விழா நடைபெற வேண்டும்: சுவிஸ் உள்துறை அமைச்சர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com