Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் ஈழப் பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது கருணாநிதியால்தான் முடியும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாட்டு சபையில் உள்ள ஜெனீவாவுக்கு கருணாநிதி நேரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்

சென்னையில் நேற்று நடந்த டெசோ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,

2009-ல் இலங்கையில் நடந்த போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது நாம் 3-ம் கட்ட போராட்டத்தில் களத்தையும், யுக்தியையும் மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதன் தொடக்கம்தான் இந்த மாநாடு. இலங்கையில் நடப்பது தமிழ் ஈழப் பிரச்சினை இல்லை. அது மனித உரிமை சிக்கலாகும். இதனை உலக கவனத்துக்கு கொண்டு சென்றால்தான், நாம் அடுத்த கட்டத்துக்கு செல்லமுடியும்.

தமிழ் ஈழப் பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது கருணாநிதியால்தான் முடியும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாட்டு சபையில் உள்ள ஜெனீவாவுக்கு கருணாநிதி நேரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசுகையில்,

தனி ஈழத்தை வென்றெடுப்பதற்கு முன்பாக 3 சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது. ஈழத்தில் தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில் சிங்களவர்களையும், இராணுவ முகாம்களையும் குடிபெயர வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

2-வது சவால் தமிழர்கள் மீது இராணுவத்தினர் செய்து வரும் கொடுமைகளை நீக்கி, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தரவேண்டும். 3-வது தமிழர்கள் மீது திணிக்கப்படும் கலாசார சீரழிவுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இந்த 3 சவால்களை வென்றெடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தனி ஈழம்தான் தீர்வு என்பதை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லவேண்டும். அதற்கான யுக்திகளையும், செயல் திட்டங்களையும் கலைஞர் வகுத்துத்தர வேண்டும். களம் காண நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈழம் வெல்லும், காலம் சொல்லும் என்றார்.

தி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில்,

ராம்விலாஸ் பஸ்வான் போன்ற சக்தி வாய்ந்த தலைவர்களை ஒன்று திரட்டி கருணாநிதி தொடக்கியுள்ள `டெசோ' மாநாட்டை வெற்றிகரமாக தொடக்கியுள்ளோம்.

இங்கே பேசியவர்கள் காவல்துறை யாரும் இங்கே இல்லை என்று வருத்தப்பட்டனர். தமிழக மக்களின் காவல் தலைவராக கருணாநிதியும், காவலராக நாமும் இருக்கும்போது இங்கு காவலர்கள் தேவையில்லை.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கு முன்பாக ஈழப் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பவேண்டும். ஈழப் பிரச்சினையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தான் தனி ஈழம் பிறக்கும் என்றார்.

0 Responses to டெசோ தீர்மானங்களை ஐ.நா சபையில் கருணாநிதி சமர்ப்பிக்க வேண்டும்!: சுப.வீரபாண்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com