ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் அகதிகளை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் புதிய சட்டமொன்றை ஆஸ்திரேலிய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் புகலிட கோரியாளர்கள் இனி வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்கு தங்கவைக்கப்படவுள்ளனர்.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் படகுகள் மூலம் சட்டவிரோதமாக பிரவேசித்து புகலிடம் கோரி வருகின்றனர். இந்நிலையில் இனி இந்நாடுகளிலிருந்து வருவோர், எதிர்வரும் காலத்தில் பபுவா நியூகினா மற்றும் நாரு ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்படவுள்ளதாகவும், இப்புதிய சட்டத்தின் ஊடாக புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஆஸ்திரேலியா அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் படகுகள் மூலம் புகலிடம் கோருபவர்களில் 15 வீதமானோர் இலங்கையர்கள் என ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அண்மைக்காலமாக ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்டு செல்ல முனையும் பல இலங்கை அகதிகள் கைது செய்யப்படுவதும், சுற்றிவளைக்கப்படுவதுமாக கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகதிகளை வேறு நாடுகளுக்கு அனுப்பும் புதிய சட்டமூலத்தை நிறைவேற்றியது ஆஸ்திரேலியா
பதிந்தவர்:
தம்பியன்
18 August 2012
0 Responses to அகதிகளை வேறு நாடுகளுக்கு அனுப்பும் புதிய சட்டமூலத்தை நிறைவேற்றியது ஆஸ்திரேலியா