Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருநாடகாவில் தற்போது உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வில் பொங்குதமிழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் தமிழ்ச் சங்கத் தலைவர் பொங்குதமிழ் தீர்மானத்தை வாசித்தார்.
அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்; வருமாறு:-

மனித கொள்கைக்குப் புறம்பாக மனித இனப் படுகொலைசெய்த இலங்கை அதிகபர் ராஜபக்சவை ஐக்கியநாடுகள் சபை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும்.

எக்காரணம் கொண்டும் போர்க்குற்றவாளி மகிந்தவை இந்தியநாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என நடுவண் அரசைக் கோருதல்.

அழிந்துவரும் தமிழ்மொழிக் கல்வியை நிலைநாட்ட முதலாம் மொழியாக தமிழ்மொழியை கற்பிக்க தமிழ்ப்பெற்றோர் முன்வரவேண்டும்.

உலகத் பொதுமொழியாம் திருக்குறள் இந்திய தேசிய நூல்களில் ஒன்றாக  அரசு அறிவிக்கவேண்டும் என்றும் -

செம்மொழியாம் தமிழ் மொழியை இந்திய தேசிய ஆற்றுமொழிகளில் ஒன்றாக அறிவிக்கவேண்டும் என்றும் - இந்திய நடுவண் அரசை இந்த பொங்குதமிழ் அவை கேட்டுக்கொள்கின்றது.

கருநாடகத் தமிழர்கள் சாதி மதம் அரசியல் வெறுபாடுகளை மறந்து ஒருகுடையின் கீழ் தமிழர்களாக ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்பதை இந்தப் பொங்குதமிழ் பேரவை கேட்டுள்ளது.

போன்ற தீர்மானங்கள் அங்கு பொங்குதமிழ் அரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கரகோசங்களுக்கு மத்தியில் வாசிக்கப்பட்டது.

0 Responses to கருநாடகாவில் நிறைவேற்றப்பட்ட பொங்குதமிழ் தீர்மானம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com