Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தியாக தீபம் திலீபன் அவர்களின் 25ஆம் ஆண்டு நிறைவு நினைவு நிகழ்வும் கேணல் சங்கர் அவர்களின் நினைவு நிகழ்வும் நேற்று (29.09.2012) வுப்பெற்றால் நகரில் நடைபெற்றது. நிகழ்வில் பொதுச்சுடரை கோட்டப்பொறுப்பாளர்  திரு . ஜெயா அவர்கள் ஏற்றிவைக்க , பொது ஈகைச்சுடரை மாவீரர் நலன் காப்பகப் பிரிவின் யேர்மனிக் கிளைப் பொறுப்பாளர் செல்வன்.சுவீற்சன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் சுடர் வணக்கம் ஆகியன இடம்பெற்றன.

தொடர்ந்த இசைவணக்கத்தை செந்தளிர் இசைக்குழுவினர்  எழுச்சியூட்டும் பாடல்கள் மூலமாக நிகழ்த்த, அதனைத்தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் ஈகை பற்றியதான நினைவுப்பேருரையை ஐரோப்பியத் தமிழ் வானொலியின் நிர்வாக இயக்குணர திரு. இரவீந்திரன் அவர்கள் நிகழ்த்தினார்.  தொடர்ந்து தமிழர் கலை பண்பாட்டுக் கழக மாணவிகளின் நடனம் நடைபெற்றது. இறுதியாக புலம்பெயர்த் தமிழர்களின் செயற்பாட்டு முக்கியத்துவம் குறித்து திரு. திருச்செல்வம் அவர்கள் உரை நிகழ்த்தினார். இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் ஒலிக்க அனைத்து உறவுகளும் எழுந்து நின்று கரகோசம் செய்தபடி பாடலை இசைத்தனர். அதனைத் தொடர்ந்து தாரக மந்திரம் ஒலிக்க நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

 

0 Responses to யேர்மனி வுப் பெற்றால் நகரில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவு நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com