சென்னை
நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா மாலை
அணிவிக்கும் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன்,
மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் 2 பேரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
முதலமைச்சரை சந்தித்து நீங்கள் மனு கொடுத்தது போல் விஜயகாந்தும் சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறாரே?
நாங்கள்
ஆரம்ப காலத்தில் இருந்து தொகுதி பிரச்சினை குறித்து முதலமைச்சரையும்,
அமைச்சர்களையும் சந்தித்து பேச கட்சி தலைவர் விஜயகாந்திடம் அனுமதி
கேட்டோம்.
இதேபோல்
மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் அரசு விழாக்களிலும் பங்கேற்க
அனுமதி கேட்டோம். ஆனால் அதற்கு அவர் அனுமதி அவர் தரவில்லை.
தொகுதி
பிரச்சினை எதுவும் நிறைவேறாததால் முதலமைச்சரை சந்தித்தோம். நாங்கள்
சந்தித்ததை நாடகம் என்று கூறும் விஜயகாந்த் இப்போது அவரே முதலமைச்சரை
சந்திக்க அனுமதி கேட்டு இருக்கிறார். அப்படியானால் இப்போது அவர் நடந்து
கொள்வது கபட நாடகமா?
வீட்டை
காலி செய்யும்போது உரிமையாளரிடம் பொருட்களை ஒப்படைத்து விட்டுதான் செல்ல
வேண்டும் என்று கூறி உங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என
மறைமுகமாக கட்சி கொறடா கூறி இருக்கிறாரே?
தே.மு.தி.க.
எம்.எல்.ஏ.க்கள் 29 பேரும் அ.தி.மு.க. தயவால்தான் வெற்றி பெற்று
எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை என்ற பிறகு
விஜயகாந்த் உள்பட 29 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய தயாரா? அப்படி
அவர்கள் ராஜினாமா செய்ய முன் வந்தால் அதில் முதல் ஆளாக எம்.எல்.ஏ. பதவியை
ராஜினாமா செய்வது நாங்களாகத்தான் இருக்கும்.
ஜெயலலிதாவை சந்தித்ததற்காக உங்கள் வீடு, அலுவலகம் தாக்கப்பட்டு இருக்கிறதே?
எங்களது
வீடு தாக்கப்பட்டது மட்டும் அல்ல. கொலை மிரட்டல், ஆபாச எஸ்.எம்.எஸ். தந்து
தொல்லை கொடுக்கிறார்கள். கலாட்டாவில் ஈடுபடுகிறார்கள். இது அநாகரீக செயல்.
தைரியம் இருந்தால் எங்களை கட்சியை விட்டு நீக்கி பார்க்கட்டும்.
தே.மு.தி.க.வில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. பக்கம் வர இருப்பதாக கூறப்படுகிறதே?
அதுபற்றி எங்களுக்கு தெரியாது.
பத்திரிகையாளர்களிடம் விஜயகாந்த் கோபப்பட்டு அநாகரீகமாக நடந்து கொள்கிறாரே?
இது தவறுதான். அவ்வாறு நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது.
0 Responses to தேமுதிகவில் இருந்து மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பக்கம் வருகிறார்களா?: பரபரப்பு பேட்டி