திருவண்ணாமலை
கிரிவல பாதையில் 2.6 ஏக்கரில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. 6
ஆண்டுகளுக்கு முன்பு இதனை அமைத்தார். இந்த இடத்தை உள்ளூர் பக்தர் ஒருவர்
தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் பிடரியில் தலைமை
அலுவலகம் உள்ளது.
அங்கிருந்து
எல்லா ஆசிரமங்களையும் நிர்வகித்து வந்தார். இந்த நிலையில் நித்யானந்தா
திடீரென இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார். நித்யானந்தா இளைய ஆதீனமாக
நியமிக்கப்பட்டதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்டது.
அதையடுத்து
இந்த விவகாரத்தில் தலையிட்ட தமிழக அரசு நித்யானந்தாவை இளைய ஆதீனமாக
நியமித்தது செல்லாது. அவர் எந்த மடத்துக்கும் தலைமை பதவி வகிக்க
தகுதியானவர் இல்லை என்று கூறியது.
அதோடு
மதுரை ஆதீனத்தையும் அதன் சொத்துகளையும் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து இளைய ஆதீனமாக இருந்த நித்யானந்தாவை அருணகிரிநாதர் திடீரென
நீக்கினார்.
இந்த
நிலையில் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்த
இந்து அறநிலையத்துறை இறங்கியுள்ளது. அதற்காக உதவி ஆணையர் ஜோதி
கையெழுத்திட்ட நோட்டீஸ் நித்யானந்தாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்,
’’நித்யானந்தா
ஆசிரமத்தில் கோவில் உள்ளது. அங்கு தினசரி பூஜைகள் நடக்கிறது. இதில்
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் வழிபடும் கோவில்களை
தனிநபர் சொந்த செலவில் உருவாக்கி நிர்வகித்தாலும் அறநிலையதுறை அதை தனது
கட்டுபாட்டில் கொண்டுவர சட்டத்தில் இடம் உள்ளது.
அந்த
அடிப்படையில் நித்யானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. நோட்டீசுக்கு பதிலளிக்க 15 நாள் அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
0 Responses to நித்தி ஆசிரமத்தை அரசு ஏற்க முடிவு!