Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வூப்பற்றால் நகரில் வெகுசிறப்பாக நடைபெற்றது பெருந்திரளான மக்கள் கூடியிருந்த வூப்பர் மண்டபத்தில் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரால் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட எழுச்சிநிகழ்வு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் செயற்பாட்டார்களினால்  பொதுச்சுடர் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது ...

அதனை தொடர்ந்து மாலதியின் வரலாற்று நிகழ்வு வெண்திரையில் திரையிடப்படது.. தொடர்ந்து மாலதியின் வாலாறு சொல்லும் வில்லிசையும் எழுச்சிநடனங்களும் கவிதைப்தொகுப்பும் நடைபெற்றது  இடையிடையே தேசியத்தலைவரின் பெண்விடுதலை தொடர்பான சிந்தனைகள் வாசிக்கப்பட்டது..தொடந்து வேரும் விழுதும் கவியரங்கும் பெண்கள் பற்றிய எழுச்சி உரைகளும் இடம் பெற்றது..

தமிழிழ மண்ணின் விடிவிற்காக புலம்பெயர்நாடுகளில் இளையவர்கள் போராட்டங்களை முன்னெடுப்பவரும் பெல்யியத்தில் இருந்ந்து யெனிவாவுக்கு நடைபயணம் மேற்கொண்டவருமான அறப்போராளி சிவந்தன் அவர்களின் சிறப்புரையும் இடம் பெற்றது..

அதனைத்தொடர்து வெல்வது உறுதி தலைவர் வருவார் நடனத்தொகுப்புடனும்  நம்பங்கள் தமிழிழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது...

0 Responses to யேர்மனி வுப்பெற்றால் நகரில் நடைபெற்ற 2ம் லெப்.மாலதியின் 25 வது நினைவுநாளும் தமிழிழப்பெண்கள் எழுச்சி நாளும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com