Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மியான்மாரில் வங்காளதேசத்துக்கு அண்மையிலுள்ள மாநிலமான ராக்கைனில் ஜூன் தொடக்கம் ராக்கைனின் பழங்குடி புத்த மதத்தினருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வருகின்றது. இதில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். கடந்த 6 நாட்களில் மட்டும் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் அகதிகள் வங்காளதேசத்துக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த வாரம் மட்டும் இடம்பெயர்ந்தவர்கள் தொகை 28 000 ஆகும். இதேவேளை அங்கிருந்து இடம்பெயரும் மக்கள் மியான்மார் அரசாங்கமும் இராணுவமும் கலவரத்தை அடக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதாக பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

ஜூனில் தொடங்கிய வன்முறையில் இதுவரை 75 00 முஸ்லிம் அகதிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் வங்காள் தேசத்தில் ஏற்கனவே பல ஆயிரம் மியான்மார் அகதிகள் இருப்பதால் சமீபத்தில் அங்கு வரும் அகதிகளுக்கு இடமின்றி விரட்டியடிக்கப் படுகின்றனர்.

இதனால் சுமார் 22 000 அகதிகள் அருகேயுள்ள தீவுகள் மற்றும் மலைக்காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் உணவுக்கும் தங்குவதற்கும் வழியின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மியான்மார் அகதிகளின் நிலை தீவிரமடைந்ததையடுத்து ஐ.நா அமைதி காக்கும் படையினர் அங்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மியான்மாரிலிருந்து கடந்த வாரம் இடம்பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 28 000

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com