Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வங்க கடலில் மையம் கொண்டிருக்கும் புயல், நாகப்பட்டினத்துக்கும், நெல்லூருக்கும் இடையே நாளை மறுதினம் கரையை கடக்கவிருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில், பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் புயல் உண்டாக கூடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பதாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென் கிழக்கு வங்க கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் இத்தாக்கம் உருவாகவுள்ளது.

0 Responses to வங்க கடலில் புயல் அபாயம் : தமிழக கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com