Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டு தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இரண்டாம் உலகப் போரின் போது வைக்கப்பட்ட வெடிகுண்டு, வெடிக்காத நிலையில் ஓடுதளத்திற்கு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குண்டு சுமார் 250 கிலோகிராம் எடையில் இருந்ததாகவும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இக்குண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீது வீசப்பட்டதாகவும் டோக்கியோ நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இக்குண்டை தொடர்ந்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதால் ஷன்டாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியின் போது ஷன்டாய் விமானநிலையம் பல மாதங்களுக்கு பின் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2ம் உலக போரின் போது பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com