Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் இப்போது சிறுபான்மை ஆகிவிட்டது. அப்படி இருக்கையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்ய என்ன தகுதி இருக்கிறது

என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.  மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் ஹசாரே, "காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தனது பெருபான்மையை இழந்து விட்டது. அப்படி இருக்கையில் தனது பெருபான்மையை, நிரூபிக்க வேண்டியது காங்கிரசின் தார்மீகப் பொறுப்பு. ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் காங்கிரஸ் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளது.

மேலும் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு அனுமதியும் வழங்கியுள்ளது. இதை எல்லாம் மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இப்படி காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சியில் தார்மீகப் பொறுப்புக்கள் மீறப்பட்டால், மக்களை அழைத்து, தெருவில் நின்று போராட வேண்டியிருக்கும்.

இப்படிப்பட்ட மக்கள் விரோத அரசைக் கண்டித்து வரும் ஜனவரி  மாதம் முதல்  நாடெங்கும் சென்று  மக்களோடு மக்களாக தெருவில் நின்று போராட்டம் நடத்த உள்ளோம் எகிப்து புரட்சி போன்று மிகப் பெரிய புரட்சி வெடிக்கும் என்று அன்னா ஹசாரே மேலும் கூறியுள்ளார்.

0 Responses to சிறுபான்மை காங்கிரசுக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்ய என்ன தகுதி இருக்கிறது?: அன்னா ஹசாரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com