Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திங்கட்கிழமை கிழக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று நேட்டோ சேவையாளர்கள் 4 போலிசார் மற்றும் 7 பொது மக்கள் அடங்குவர். இத் தாக்குதலில் மேலும் 57 பேர்  படுகாயமடைந்தும் உள்ளதாக ஆப்கானின் உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

இத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் ISAF எனப் படும் ஆப்கானில் குடியிருக்கும் சர்வதேச பிரதிப் பாதுகாப்புப் படைப் பிரிவையும், ஆப்கான் போலிசாரையும் குறி வைத்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் கட்டப் பட்டிருந்த வெடிகுண்டுகளுடன் வந்து மோதி வெடிக்கச் செய்ததன் மூலம் இவர்களைக் கொன்றுள்ளார்.

இதை ISAF உம் உறுதி செய்துள்ளது. மேலும் ISAF ஐச் சேர்ந்த குறிப்பிட்ட கொல்லப் பட்ட படை வீர்ர்களின் சொந்த நாடு எதுவென இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஷபியுல்லாஹ் முஜாஹிட் இத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஊடகங்களுக்குத் தகவல் அளித்துள்ளார். இதில் கொல்லப் பட்டவர்களில் 8 வெளிநாட்டுப் படையினரும், 6 ஆப்கான் படையினரும் கொல்லப் பட்டிருப்பதாக பலியானவர்களின் தொகை சற்றுக் கூடுதலாக அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

0 Responses to ஆப்கானில் 3 நேட்டோவினர் 4 போலிசார் உட்பட 14 பேர் தற்கொலைத் தாக்குதலில் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com