Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரண்டாம் உலகயுத்தத்தில் கொல்லப்பட்ட போர்க்கைதிகளின் ஆவிகள் தெரிவது போன்று இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜோன் டுலோச் என்பவர், இந்தோனேசியாவின் போர்னியோ (Borneo) தீவுகளுக்கு அண்மையில் விஜயம் செய்த போது இப்புகைப்படத்தை எடுத்துள்ளார்.

சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகமகா யுத்த காலப்பகுதியில் ஜப்பானியர்களிடம், போர்க்கைதிகளாக பிடிபட்ட ஆஸ்திரேலிய - இங்கிலாந்து படைவீரர்கள் போர்னியோ தீவின் சந்தகானிலிருந்து ரானோ எனும் இடத்திற்கு நடை பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.

அவ்வாறு கொண்டு செல்லப்படும் போதே கொடும் சித்திரவதைக்கு மத்தியிலும், பசிக்கொடுமை, வறட்சி, நோய்த்தொற்று என்பவற்றுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கானோர் இறந்து போக இறுதியில் 260 கி.மீ கடந்து குறித்த இடத்திற்கு வந்தடைந்த சொற்ப அளவினரும், ஜப்பானிய பாதுகாப்பு படையினாரால் சுட்டுக்கொல்லபப்ட்டனர். இடைநடுவே தப்பித்த ஆறு இராணுவ வீரர்கள், அங்குள்ள உள்ளூர் மக்களின் உதவியுடன் மீண்டும் கூட்டுப்படையுடன் இணைந்து கொண்டனர்.


Sandakan Death Marches என அழைக்கப்படும் இந்த மரணப்பாதையின் வழியே கடந்த 2011ம் ஆண்டு பயணம் மேற்கொண்ட போதே குறித்த இராணுவ அதிகாரி இப்படத்தை எடுத்துள்ளார். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஆஸ்திரேலிய இராணுவ வீரர்கள் அனுபவித்த மிகப்பெரும் கொடூரமான தனி நிகழ்வாக இன்றுவரை Sandakan Death Marches அழைக்கப்படுகிறது.

0 Responses to 2ம் உலகப்போரில் கொல்லப்பட்டோரின் ஆவிகள் தோன்றும் புதிய புகைப்படம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com