Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரிய அரச படைகளைக் குறி வைத்து இன்று புதன்கிழமை அலெப்போ நகரில் உள்ள மக்கள் சதுக்கத்தில் அடுத்தடுத்து
இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் குறைந்தது 40 பேர் கொல்லப் பட்டும் 90 பேர் காயமடைந்தும் உள்ளதாக சிரிய கிளர்ச்சிப் படை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

அலெப்போவிலுள்ள சாடல்லாஹ் அல் - ஜபிரி சதுக்கத்திலேயே இக்குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இத்தாக்குதல் அடுத்தடுத்து 3 கார் குண்டுகளை வெடிக்கச் செய்ததன் மூலம் மேற்கொள்ளப் பட்டதாகவும் கொல்லப் பட்டவர்களில் பெரும்பகுதி அரச படையினர் எனவும் சிரியாவில் இயங்கும் மனித உரிமைகள் அமைப்புக் கூறியுள்ளது. இதை கிளர்ச்சிப் படையும் உறுதி செய்துள்ளது.

இரத்தக் கறையுடனும் இராணுவ உடையுடனும் அதிகளவான சடலங்கள் சிதறிக் கிடப்பதை சிரிய அரச தொலைக் காட்சி காட்சிப் படுத்தியுள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களில் 25 பேரும் காயமடைந்தவர்களில் 75 பேரும் பொது மக்கள் ஆவார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அலெப்போ நகரமே சிரியாவில் மிகப் பெரிய நகரம் என்பதுடன் வணிக ரீதியாகவும் முக்கியத்துவம் மிக்க நகரமாகும்.இங்கு பல மாதங்களாக சிரிய அரச படையினருக்கும் கிளர்ச்சிப் படைக்கும் கடும் மோதல் இடம் பெற்று வருகின்றது.

0 Responses to சிரியாவின் அலெப்போவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com