சீன நபர் ஒருவரின் நிறுவனம் அமெரிக்காவின் கடற்படைத் தளம் உள்ள
இடமொன்றில், நான்கு காற்றாலை நிலையங்களை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர்
பாரக் ஒபாமா தடை விதித்திருந்தார்.
இதையடுத்து ஒபாமா மீது அந்நபர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
ஒபாமா இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் குறித்த கடற்படைத் தளம் தானியங்கி டிரோன் விமானங்களை சோதனை செய்யப் பயன்படுத்தப் படுவதால் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே இத் தடை விதிக்கப் பட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் இந்த இடத்தை வாங்க முயற்சித்த சீனாவின் ரால்ஸ் நிறுவனம் ஒபாமா நியாயமற்ற முறையில் தடை விதித்துள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் ஒபாமாவின் இந்த முடிவு எதிர்வரும் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டே மேற்கொள்ளப் பட்ட ஒன்று என சீன ஊடகங்கள் கூறியுள்ளன. அமெரிக்காவில் இது போன்ற வெளிநாட்டு முதலீடுகள் தடுக்கப் படுவது அரிதான விடயமாகும்.

0 Responses to அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீது சீன நிறுவனம் வழக்கு