தமது 17 தொண்டூழிய பணியாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டமைக்கு
நீதி கோரி புதிய வீடீயோ பரப்புரை ஒன்றை பட்டினிக்கு எதிரான நடவடிக்கை
(Action Againts Hunger - ACF) தொண்டு நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, ஆகஸ்டு 4ம் திகதி, இலங்கையின் மூதூரில் வைத்து ACF நிறுவனத்தின் 17 தொண்டூழியர்கள் கொல்லப்பட்டனர். குறித்த பணியாளர்கள் வரிசையில் நிற்க வைத்து, கைகள் கட்டபட்டு தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், இலங்கையின் யுத்த காலத்தில் இடம்பெற்ற மிகக்கொடூரமான படுகொலை சம்பவங்களில் ஒன்றாக பதியப்பட்டுள்ளது.
இப்படுகொலைகள் தொடர்பில் விசாரண நடத்திய இலங்கையின் மூன்று தேசிய விசாரணைக்குழுக்களுமே நிலையான பதில்களை தரவில்லை. கொலைக்கான ஆதாரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன. இக்கொலைகளுக்கான நீதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளன எனக்குற்றம் சுமத்தியுள்ளது ACF தொண்டு நிறுவனம்.
எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி ஜெனிவாவில், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது, எமக்குரிய இறுதிச்சரியான சந்தர்ப்பம். இதை தவறவிட்டால், இந்த கொலைகளுக்கான தண்டனை, நீதி ஒருநாளும் கிடைக்காது போகலாம். எனவே இத்தினத்திற்குள் இவ்விவகாரத்தை ஐ.நாவின் பார்வைக்கு அழுத்தமாக கொண்டுவருவதற்கு எமக்கு ஒத்துழைப்பு தாருங்கள். இலங்கையின் போர்க்குற்றங்களை நாம் இன்னமும் முழுமையாக மறந்துவிடவில்லை என்பதை ஐ.நாவுக்கு உணர்த்துங்கள் என கோரிக்கை விடுத்து கையெழுத்திடும் விண்ணப்ப மனு படிவம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
மூதூர் படுகொலைகளுக்கு நீதிகோரி பொதுமக்களால் அனுப்பப்படும் இந்த அனைத்து மனுக்களும் ஒன்றாக சேர்த்து எதிர்வரும் அக்.22ம் திகதி ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவரிடம் AFC அமைப்பு கொடுக்கவுள்ளது.

0 Responses to இலங்கையின் போர்க்குற்றங்களை இன்னமும் முழுமையாக மறக்கவில்லை என்பதை உணர்த்துங்கள்: ACF