Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அணுச்சக்தி தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக வெளிவந்த தகவல்களை அமெரிக்கா - ஈரான் இரு நாடுகளும் மறுத்துள்ளன.

ஈரானின் அணு ஆராய்ச்சி திட்டங்களுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அமெரிக்காவும் ஈரானும் அணுச்சக்தி தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், அமெரிக்க தேர்தலை அடுத்து இப்பேச்சுவார்த்தை தொடரும் எனவும் நேற்று ஊடகங்களில் வெளிவந்த சில தகவல்களால் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது இதனை உடனடியாக மறுத்துள்ளன அமெரிக்கா மற்றும் ஈரான் அரசுக்கள்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அலி அக்பார் சலேஹியிடம் இப்படி அணுசக்தி தொடர்பில் இகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றனவா என கேட்கப்பட்ட போது, இந்த விடயங்களில் நாங்கள் இப்போது தலையிடவில்லை என்றார்.

வாஷிங்டனில் வெள்ளை மாளிகை பேச்சாளர் டாமி வியெடரும் இது பற்றி மறுப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்காவும் - ஈரானும் எந்தவொரு இரகசிய பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதற்கும் இணக்கம் தெரிவிக்கப்படவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to அணு சக்தி தொடர்பில் இரகசிய பேச்சுவார்த்தையா?: அமெரிக்கா, ஈரான் மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com