Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர் மிட் ரூம்னிக்கு இடையில் மூன்றாவதும் இறுதியுமான தேர்தல் விவாதம் இன்று இரவு நடைபெறுகிறது. நவம்பர் 6ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒபாமா - ரூம்னி இருவருக்கும் 47-47% வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தேர்தலில் கால வரலாற்றில் சம அளவில் இவ்வாறு இரு வேட்பாளர்களுக்கு ஆதரவு தொடர்வது மிக அரிய நிகழ்வாகும்.

இரண்டாவது தேர்தல் விவாதத்தில், பொதுமக்களின் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் பதில் அளித்தது போன்றில்லாது, இம்முறை சிபிஎஸ் செய்தி ஊடக மாடரேட்டர்களில் ஒருவரான போப் ஷியெஃபெர் கேள்விகளை கேட்கவுள்ளார்.

முதலாவது தேர்தல் விவாதத்தில் ரூம்னியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. எனினும் இரண்டாவது தேர்தல் விவாதத்தில் ஒபாமா முன்னிலை பெற்றார். இதை தொடர்ந்து, மூன்றாவது விவாதத்தில் வெற்றி பெறுபவர், தேர்தலிலும் வெற்றிபெறக்கூடிய சாத்தியம் அதிகம் இருப்பதாக கருதப்படுவதால் இவ்விவாதம் பெரும் ஊடக கவனம் பெற்றுள்ளது.

இவ்விவாதத்தில் அமெரிக்காவின் வெளியுறுவு கொள்கைகள் பற்றி அதிகம் விவாதிக்கப்படலாம் எனவும் குறிப்பாக லிபியாவில் அமெரிக்க தூதுவர் கொல்லப்பட்டது, ஈரான் அணுச்சக்தி நிகழ்ச்சித்திட்டம், சீனா, ரஷ்யாவுடனான வெளியுறவு கொள்கைகள், ஐரோப்பிய நிதி நிலைமை நெருக்கடி, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளுடனான அணுச்சக்தி கூட்டு ஒப்பந்தம் என்பவை தொடர்பில் முக்கியமாக பேசப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to அமெரிக்காவின் எதிர்கால அதிபரை நிர்ணயிக்க போகும், இறுதி தொலைக்காட்சி விவாதம் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com