மைசூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த காவிரி எக்ஸ்பிரஸ், ஜோலார் பேட்டை அருகே இன்று காலை விபத்துக்கு உள்ளாகியது.
ரயில் வனப்பகுதியால் வந்து கொண்டிருந்த போது, தண்டவாளத்திற்கு குறுக்கே பாறாங்கல் ஒன்று வீழ்ந்து கிடந்துள்ளது. இதை பார்த்தும் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றுள்ளார். இறுதியில் ரயிலின் இன்ஜின் பாறாங்கல்லுடன் மோதி நின்றுள்ளது. வேகத்தை திடீரென கட்டுபடுத்த முயன்றதால் பின் பக்கமாக நான்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பயணிகள் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கனமழையால் சரிந்து கிடந்த பாறாங்கல்லை கண்டு தக்க நேரத்தில் இரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை 4 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டதால் ரயில் பயணிகள் பலர் பதற்றடைந்துள்ளனர். எனினும் இச்சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு தற்போது மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
பாறாங்கல்லை கண்டதுடன் உடனடியாக ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை நிறுத்தியமைக்காக ஓட்டுனர் சிறீராமுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சென்னை வந்து கொண்டிருந்த காவிரி எக்ஸ்பிரஸ் விபத்து: உயிர்ச்சேதம் இல்லை