ஜம்மு மற்றும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒரு போதும் இருக்க முடியாது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஐ.நாவில் காஷ்மீர் தொடர்பில் நேற்று உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வீணான குறிப்புக்கள் தேவையற்றது. ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் இந்தியாவின் நிறுவப்பட்டுள்ள ஜனநாயக நடவடிக்கைகளுடன் அமைவாக தனது எதிர்காலத்தை தீர்மானித்துள்ளனர். ஜம்மு, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதனை நாம் தெளிவாக அறிவுறுத்த விரும்புகிறொம் என கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஐ.நாவுக்கான பாகிஸ்தானிய துணை தூதுவர் ராசா பசீர் தரார், ஜம்மு காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் கூறிய கருத்துக்களை தேவையற்றது என கருதிவிட முடியாது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒரு நாளும் இருக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

0 Responses to ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இல்லை: பாகிஸ்தான்