Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ மரணத்தை ஏற்படுத்தும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கியூபாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த பிடல் காஸ்ட்ரோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோ ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் ஸ்பெயின் பத்திரிக்கையில் பிடல் காஸ்ட்ரோ இறக்கும் தருவாயில் உள்ளார் என செய்தி வெளியானது.

இத்தகவலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள பிடல் காஸ்ட்ரோ, கியூபாவுக்கு எதிரானவர்கள் இது போன்ற பொய்யான செய்தியை பரப்பி உள்ளனர்.
எனக்கு பக்கவாத நோய் தாக்கியுள்ளது. இருப்பினும் என்னுடைய பணிகளை செய்து கொள்ளும் அளவுக்கு உடல் நலத்துடன் உள்ளேன.

என்னை பற்றி தவறான செய்தியை பரப்பிய கெட்ட சாத்தான் பறவைகளை பற்றி நான் எண்ணி பார்க்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to நான் நலமாக உள்ளேன்: வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் பிடல் காஸ்ட்ரோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com