Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


5.7 மில்லியன் குறோணர் சிறீலங்கா அனுப்பப்பட்டதாக இந்த வழக்கு தாக்கலாகியிருந்தது.
 
டென்மார்க் தமிழர் புனர் வாழ்வுக்கழகம் வைலை நகரத்தில் காரியாலயம் வைத்து செயற்பட்டதும், அவர்கள் மீது பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கிய சந்தேகத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதும் தெரிந்ததே.
 
இப்போது அந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் திகதி அடித்த சுனாமியைத் தொடர்ந்து ரி.ஆர்.ஓ திரட்டிய பணத்தில் 5.7 மில்லியன் குறோணர் சிறீலங்கா அனுப்பப்பட்டதாக இந்த வழக்கு தாக்கலாகியிருந்தது.
மேற்கண்ட பணம் ரி.ஆர்.ஓ அமைப்பு மூலமாக பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்ற விடுதலைப் புலிகளுக்கு போனது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

கடந்த 2004 – 2007 ற்கு இடைப்பட்ட காலத்தில் இந்தப் பணம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன.

குற்றத் தடுப்புச் சட்டம் 114 பீ மற்றும் சட்ட இலக்கம் 721 பிரிவு 1 உப பிரிவு 2 ன் அடிப்படையில் பயங்கரவாத அமைப்பிற்கு பணம் வழங்கியதாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

தாம் தொண்டு நிறுவனம் என்றும், தம்மால் சேர்க்கப்பட்ட பணம் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது என்றும் ரீ.ஆர்.ஓ தரப்பு தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் நிதியின்மை, காரியாலய வாடகை கட்ட முடியாமை காரணமாக ரீ.ஆர்.ஓ வைலைக் காரியாலயம் ஏற்கெனவே மூடப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கில் சுமத்தப்பட குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ரீ.ஆர்.ஓ தலைவர் வரும் இரண்டு மாதங்களுக்குள் நஷ்டஈடு கோரி மேன்முறையீடு செய்ய வழியுள்ளது.

அதேவேளை தமிழர் புனர்வாழ்வுக்கழக வங்கிச் செயற்பாடுகள் ஏற்கெனவே போலீசாரால் உறைய வைக்கப்பட்டுள்ளன.
இந்த வங்கியின் செயற்பாடு யாது என்பது அடுத்த கேள்வியாகும்.
அத்தோடு இந்தத் தீர்ப்பு ரீ.ஆர்.ஓ வின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக வெளியான பத்திரிகை செய்தி கீழே தரப்படுகிறது, அதன் மூலம் மேலதிக விபரங்களை அறியலாம்.

0 Responses to டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மீதான வழக்கு தள்ளுபடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com