Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்றதாக கூகுள் இந்தியா நிறுவனத்தின் பணிபுரியும் பெண் புகார் அளித்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைமை செயலகத்தில் தொழிற்நுட்ப கல்வி வாரியத்தின் சிறப்பு செயலாளராக பணியில் இருக்கும் ஷசிபூசன் லால் சுனில் என்பவர் டெல்லியில் இருந்து லக்னோ செல்லும் ரயிலில் பயணித்துள்ளார்.

அதே ரயிலில் கூகுள் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் பெண் நிர்வாகி ஒருவர், அவரது மகளுடன் பயணித்துள்ளார்.
இந்நிலையில் இரவு நேர பயணத்தில் தன்னை கற்பழிக்க முயன்றதாகவும் மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் திட்டியதாகவும் இப்பெண் இன்று காலை பொலிஸில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லால் சுனிலை பொலிஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது லால் சுனில், பயணப்பொதிகளை வைக்கும் இடத்தில் தங்களுக்குள்ளே சண்டை வந்ததாகவும் இதை மனதில் வைத்துக்கொண்டே தன் மீது இப்பெண் குற்றம் சாட்டுகின்றார் என தெரிவித்தார்.

இருப்பினும் தீவிர விசாரணையின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் இந்த அதிகாரிக்கு விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

0 Responses to கற்பழிக்க முயன்றதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது பெண் புகார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com